திடீரென தீப்பிடித்து எரிந்த விமான என்ஜின்.. அலறியடித்து ஓடிய பயணிகள்.. அதிர்ச்சி வீடியோ
இந்தோனேசியாவில் விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்த படி விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறினர்.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தின் ஜெயபுராவில் உள்ள சென்டானி விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த திரிகானா ஏர் 737-500 என்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்த படி விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறினர்.
விமானத்தின் இறக்கையில் இருந்து தீப்பொறி பறப்பது மற்றும் பயணிகள் விமானத்தில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தினால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் சென்டானி விமான நிலைய அதிகாரி சூர்யா ஏகா தெரிவித்தார்.
Trigana Air 737-500 evacuated at Jayapura Sentani Airport after flames appeared in its left engine during taxi.
— Breaking Aviation News & Videos (@aviationbrk) November 5, 2024
Surya Eka, Stakeholder Relations Department Head of Sentani Airport confirmed that there were no fatalities in the incident, only a few passengers suffered minor… pic.twitter.com/u9gxzOBIhw
இந்த விபத்து ஜெயபுரா போலீஸ் துணை மூத்த கமிஷனர் உமர் நசடேகே கூறியதாவது, நிலைமை பதற்றமாக மாறியதால், அவசர வழியை திறக்கும்படி, விமான பணிப்பெண்களுக்கு பயணிகள் அழுத்தம் கொடுத்தனர். விமானம் பின்னர் மேலும் ஆய்வுக்காக பார்க்கிங் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது மற்றும் என்ஜின் தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரணை செய்யும் போது தரையிறங்கியது.