கனடா, மெக்சிகோ, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவுக்கு செக் வைக்கும் அதிபர் ட்ரம்ப்? என்ன செய்யப் போகிறார் பிரதமர் மோடி?

மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் முதன் முதலாக உரையாற்றி வருகிறார். இந்த உரையில் எரிசக்திப் பொருள்களைக் கட்டுப்படுத்துவது, குடியேற்றம் மற்றும் எல்லைப்பாதுகாப்பு, வணிகக் கொள்கைகள், ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசி வருகிறார்.
வணிகக் கொள்கைகள் பற்றி பேசும் போது கனடா, மெக்சிகோ, சீனா மீதான வரிவிதிப்பை நியாயப்படுத்தினார். இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டு 100 சதவீதத்திற்கும் மேலாக அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா வரிவிதிக்கிறது. இது நியாயமற்றது என்று பேசினார். முன்னதாக இந்தியா அமெரிக்கப் பொருட்கள் மீது எந்த அளவு வரி வசூலிக்கிறதோ, அதே அளவு வரியை இந்தியப் பொருட்கள் மீது விதிப்போம் என்று கூறியிருந்தார். இன்று பாராளுமன்றத்திலும் இந்தியா நியாயமற்ற முறையில் வரி வசூலிக்கிறது என்று கூறியுள்ளதால், இந்தியப் பொருட்கள் மீது விரைவில் கூடுதல் வரி விதிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தியப் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் பின் இந்த முடிவை எப்படி எதிர்கொள்வார் என்று போகப் போகத் தான் தெரியும்.