கணவருக்காக பட்டினி கிடந்து எலும்பு தோலுமாய் மாறிய பெண்.. ரஷ்யாவில் ஷாக் சம்பவம்!

 
Russia

ரஷ்யாவில் கொழு கொழுவென இருந்த பெண் ஒருவர் தனது உடல் எடையை வெறும் 22 கிலோவாக குறைத்து எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான பெல்கிரேடில் வசித்து வருபவர் இளம் பெண் யானா பாப்ரோவா. இவர் கொழு கொழுவென பூசிய உடல் தோற்றம் பெண்ணாக தான் இருந்தார். இருப்பினும் கல்லூரி காலத்தில் இருந்தே உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த பெண்ணுக்கு இருந்துள்ளார்.

இவருக்கு திருமணமான நிலையில், பெண்ணின் கணவரும் யானாவின் தோற்றம் குறித்து கூறிய கமெண்ட் அடித்துள்ளார். உனது கண்ணம் கொழு கொழுவென பருமனாக உள்ளது என்று கூறி அவரை உசுப்பி விட்டுள்ளார். இதை கேட்டதும் தனது உடல் எடையை குறைத்தே தீர வேண்டும் என முடிவெடுத்த யானா, யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத டயட்டில் இருந்துள்ளார்.

Russia

இதற்காக அவர், வெறும் பிஸ்கட், டீ, சாக்லேட் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு தீவிர உடற்பயிற்சி செய்த யானா, படிப்படியாக உடல் எடையை குறைத்து தற்போது எலும்பும் தோலுமாக இருக்கும் தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

5.2 அடி உயரம் கொண்ட யானாவின் உடல் எடை என்னவென்று கேட்டபவருக்கு ஒரு கனம் மயக்கமே வந்துவிடும். ஆம், தற்போது யானாவின் உடல் எடை வெறும் 22 கிலோ தான். இவர் இப்படி மோசமாக உடல் எடையை குறைத்ததால் வேலை பறிபோனது. கணவரும் யானாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

NTV

இந்த விஷயம் எல்லாம், ரஷ்யாவின் NTV நடத்தும் டிவி ஷோவில் பங்கேற்று யானா பேட்டி அளித்து உலகிற்கு பகிர்ந்து கொண்டார். யானாவின் பேட்டியை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷோ ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்டுடியோவில் இருந்து நேரடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருக்கு மனநல சிகிச்சையும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

From around the web