கொலம்பியாவில் சிறியரக விமானம் விழுந்து விபத்து.. 5 அரசியல்வாதிகள் உள்பட 6 பேர் பலி.!

 
Colombia

கொலம்பியாவில் சிறியரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செஸ்னா டி210என் விமானத்தில் ஐந்து பேர் மற்றும் விமானியுடன் கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் உள்ள குவாய்மரல் விமான நிலையத்திற்கு காலை 7.40 மணிக்கு வில்லவிசென்சியோ நகரிலிருந்து விமானம் புறப்பட்டது.

Colombia

விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரும் முன்னாள் அதிபர் அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் சிறியரக விமானத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது விமானம் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ட்விட்டரில் அக்கட்சி வருத்தம் தெரிவித்ததுள்ளது. மேலும், விமானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காகச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web