8 ஆண்டுகளாக சொந்த மகனையே வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தாய்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!
அமெரிக்காவில் காணாமல் போனதாக கூறப்பட்ட இளைஞரை 8 வருடமாக அவரது தாயே வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜானி சந்தனா. இவரது மகன் ரூடால்ஃப் ரூடி ஃபரியாஸ் (25). இவர் 17 வயதாக இருந்தபோது கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. அதுவும் வடக்கு ஹூஸ்டன் பகுதியில் தனது இரண்டு நாய்களுடன் வாக்கிங் சென்றபோது காணாமல் போய்விட்டதாக அவருடைய தாய் ஜானி சந்தனா காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞர் ஜூன் 29-ம் தேதி அதே ஹூஸ்டன் பகுதியில் ஒரு தேவாலயத்திற்கு முன்பு மர்மமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து பேசிய சமூக ஆர்வலர் குவானெல் எக்ஸ் என்பவர் ஃபரியாஸை அவரது சொந்த தாயை கடந்த 8 வருடங்களாக வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடந்த 2015-ல் அவர் காணாமல் போன போது 2 நாட்கள் கழித்து மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் காணாமல் போனதற்காக போலீசார் உன்னை கைது செய்ய தேடுகிறார்கள் என்பது போன்ற பொய்களைக் கூறி அவரை நம்ப வைத்து கடந்த 8 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்ததாக கூறும் குவானெல் எக்ஸ் இளைஞரிடம் அந்தத் தாய் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் பலமுறை போதைப் பொருட்களைக் கொடுத்தாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் ஃபரியாஸ்க்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் அதேபோல போதைப்பொருளில் இருந்து வெளிவர உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் ஜானி சந்தனா தனது மகனிடம் அப்பாவைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் இதனால் அடிக்கடி படுக்கையில் தள்ளிவிட்டபோது அவர் கட்டிலுக்கு அடியே ஒளிந்து கொண்டதாகவும் பல்வேறு தகவலை வெளியிட்டு உள்ள நிலையில் அந்நாட்டு போலீசார் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இளைஞர் ஃபரியாஸ் குறித்து பேசிய அக்கம் பக்கத்து வீட்டார்கள் நாங்கள் அவரை கேரஜில் பார்த்துள்ளோம். வீட்டிற்கு வெளியே கடந்த 2018-ல் பார்த்தாக ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இப்படி பலரும் இளைஞரை பார்த்தாகக் கூறியுள்ளதை அடுத்து தாயே மகன் காணாமல் போய்விட்டார் என்று கூறிவிட்டு அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.