ராணுவ விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.. 15 பேர் பலியான சோகம்.. அதிர்ச்சி வீடியோ!
ரஷ்யாவில் ராணுவ விமானம் ஒன்று பறக்கத் தொடங்கிய சற்று நேரத்தில் இஞ்சின் கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் மேற்கு பகுதியில் இன்று ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விமானப்படை தளத்தில் இருந்து விமானம் டேக் ஆப் ஆன சில வினாடிகளில், அதன் என்ஜினில் இருந்து கரும்புகை எழுந்தது. பின்னர் தீப்பற்றியது.
இதன் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது. விமானத்தில் 8 ஊழியர்கள், 7 பயணிகள் என மொத்தம் 15 பேர் பயணித்தனர். இவானோவா பிராந்தியத்தில் விமானம் விழுந்ததாக ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானம் புறப்படும்போது என்ஜினில் தீப்பற்றியதுதான் விபத்துக்கு காரணம் என்றும் கூறியுள்ளது.
விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர்கூட உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
BREAKING: Large Russian military plane crashes near Ivanovo, northeast of Moscow pic.twitter.com/di4pnpJxKh
— BNO News (@BNONews) March 12, 2024
முன்னதாக ஜனவரி மாதத்தில், 65 உக்ரேனிய ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. இதில் உக்ரைன் போர்க்கைதிகள் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் உட்பட 74 பேர் பலியானார்கள். கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையாக, ரஷ்ய சிறைகளில் இருந்து உக்ரைன் கைதிகள் பெல்கொரோட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போது இந்த விபத்து நேரிட்டது.