நடுவானில் ஏற்பட்ட கோளாறு.. கீழே விழுந்து நொறுங்கிய விமானம்.. பாராசூட்டில் தப்பிய பயணிகள்.. அதிர்ச்சி வீடியோ!

 
USA

அமெரிக்காவில் விமான சாகசத்தின் போது விமானம் குடியிருப்பு பகுதியில் உள்ள வாகன நிறுத்திமிடத்தின் மீது விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வான் ப்யூரன் பகுதியில் நேற்று தண்டர் ஓவர் மிக்சிகன் விமான கண்காட்சி நடைபெற்றது. விமான சாகசத்தின் போது விமானம் குடியிருப்பு பகுதியில் உள்ள வாகன நிறுத்திமிடத்தின் மீது விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த விமானியும், உடன் இருந்தவரும் விமானம் கீழே விழுவதற்கு முன்பாகவே பாராசூட்டில் தப்பித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Michigan

வில்லோ ரன் விமான நிலையத்திற்கு தெற்கே உள்ள எம்ஐஜி-23 போர் விமானத்தில் இருந்து இரண்டு பயணிகளும் பாராசூட் செய்து பெல்வில்லே ஏரியில் தரையிறங்கியதாக பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்தவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வான் ப்யூரன் டவுன்ஷிப் மேற்பார்வையாளர் கெவின் மெக்னமாரா தெரிவித்தார்.

பெல்லிவில்லில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தின் மீது விமானம் விபத்துக்குள்ளானது, ஆளில்லாத வாகனங்கள் மீது மோதியதாக வெய்ன் கவுண்டி விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.


25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய தண்டர் ஓவர் மிக்சிகன், விபத்து காரணமாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web