ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ.. உடல் கருகி 36 பேர் பலி.. அதிர்ச்சி வீடியோ!!

 
Hawaii

அமெரிக்காவின்  ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 36 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் தீவு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத் தீயானது மவுயி தீவின் நகர்ப்பகுதிக்கும் பரவியது. மேலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தீவிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த தீயால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

Hawaii

லஹைனா நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் மவுயி தீவில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், வீடுகள், வணி நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளதாக ஹவாய் அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. டோரா சூறாவளியின் பலத்த காற்றால் வேகமாக பரவிய தீப்பிழம்புகள் காரணமாக நூற்றுக்கணக்கான இங்கே மக்கள் கடலில் குதித்து தப்பித்தனர்.

சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுமார் 12 ஆயிரம் மக்கள் வசிக்கும் கடற்கரை நகரமான லஹைனா முழுவதும் தீ ஆக்கிரமித்துள்ளது. காட்டுத்தீயால் லஹைனாவில் 270-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 2,100-க்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளது.


மவுயி தீவில் மணிக்கு 96 முதல் 112 கிலோ மீட்டர் (மணிக்கு 60 முதல் 70 மைல்) வேகத்தில் வீசிய காற்று சற்று குறைந்துவிட்டது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதனால் மவுயி தீவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காட்டுத்தீயை அணைத்து, மீட்புப்பணியை தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

From around the web