வீட்டுக்கு வீடு தனி விமானம்.. வீதியை பார்க்கிங் ஆக உபயோகிக்கும் நகரம்.. எங்கு தெரியுமா?

 
cameron airpark

அமெரிக்காவில் கேமரூன் ஏர்பார்க் நகரில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு தனித்தனியாக விமானம் வைத்துள்ளார்கள்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கேமரூன் ஏர்பார்க் (Cameron Airpark) என்ற சிறிய நகரம் உள்ளது. இந்த நகரத்தில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வேலைக்கு செல்லவும், தங்கள் அலுவலகத்திற்குச் செல்லவும் ஒவ்வொரு வீட்டிலும் விமானத்தை வைத்துள்ளனர். பொதுவாக இது போன்ற குடியிருப்பு நகரங்கள் ஃப்ளை-இன் கம்யூனிட்டிஸ் என்று அழைக்கப்படுகின்றன. 

விமான ஓட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்களை தவிர, வேறு எவருக்கும் விமானத்தை இயக்க அதிகாரம் இல்லை. கேமரூன் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் விமானங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தொழில் ரீதியாக அல்லது ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளாக இருக்கின்றனர். இவர்களுடன் சில மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற மக்களும் வசிக்கிறார்கள். இங்கு வசிக்கும் அனைவரும் தாங்கள் சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகிறார்கள்

cameron airpark.

கேமரூன் ஏர்பார்க் கடந்த 1963-ல் கட்டப்பட்டது. இங்கே மொத்தம் 124 வீடுகள் உள்ளன. விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறங்க மற்றும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் வசதியாக இங்கு 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரத்தில் உள்ள வீதிகளின் பெயர்கள் கூட விமானங்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்தது. இந்த நிலையில் தான், இந்த விமான நிலையங்களை ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக மேம்படுத்த அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாகத்தான் கேமரூன் ஏர்பார்க் நகரத்தில் வீட்டுக்கு ஒரு விமானம் நிற்கிறது.

கேமரூன் ஏர்பார்க் போலவே, ப்ளோரிடாவில் ஸ்ப்ரூஸ் க்ரீக் என்று அழைக்கப்படும் மற்றொரு ஏர்பார்க் உள்ளது. இங்கே தனியார் ஜெட் விமானங்கள் முதல் வரலாற்று விமானங்கள் வரை சுமார் 650 விமானங்கள் உள்ளன. இந்த ஸ்ப்ரூஸ் க்ரீக்கில் சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். சுமார் 1,300 வீடுகள் மற்றும் 700 ஹேங்கர்கள் உள்ளன.

From around the web