அமெரிக்காவில் 3 மகன்களை சுட்டுக்கொன்ற தந்தை.. போலீஸ் வரும்வரை படிக்கட்டில் அமர்ந்திருந்தால் பரபரப்பு!!

 
Ohio

அமெரிக்காவில் 3 மகன்களை பெற்ற தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஒஹியா மாகாணத்தை சேர்ந்தவர் ஷாட் டொர்மென். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகன், 1 மகள் உள்ளனர். நேற்று வீட்டில் இருந்தபோது டொர்மென் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன்களை சரமாரியாக சுட்டார். 3 மகன்களையும் (மகன்களின் வயது 3,4 மற்றும் 7) வரிசையாக நிற்க வைத்த டொர்மென் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

Ohio

இதை கண்டு அதிர்ச்சியடைந்த டொர்மெனின் மனைவி துப்பாக்கிச்சூட்டை தடுக்க முயற்சித்தார். ஆனால், அவரையும் டொர்மென் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மகள் வீட்டை விட்டு வேகமாக ஓடிச்சென்று அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது, துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டிற்கு சென்றபோது தாக்குதல் நடத்திய டொர்மென் வீட்டில் உள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏனினும் டொர்மெனின் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Ohio

3 மகன்களையும் சுட்டுக்கொன்ற டொர்மென் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web