விமானத்தின் கழிவறையில் உடலுறவு கொண்ட தம்பதிகள்.. கையும்களவுமாக சிக்கிய வீடியோ!

 
England

ஸ்பெயின் சென்ற விமானத்தின் கழிவறையில் ஒரு தம்பதி உடலுறவு கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் லூடன் நகரில் இருந்து இபிசா நகருக்கு கடந்த 8-ம் தேதி ஈஸிஜெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த ஒரு தம்பதியர், விமான கழிவறைக்குள் சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். வெகுநேரம் கதவு திறக்கப்படாததால் விமான பணிப்பெண் அங்கு சென்றுள்ளார். இதைப் பார்த்த பயணிகளும் அங்கு சென்றுள்ளனர். 

England

பின்னர், தயங்கி தயங்கி விமான பணிப்பெண், கழிவறையின் கதவை திறந்துள்ளார். அப்போது அங்கு கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரைகுறை ஆடையுடன் உள்ளே இருந்த தம்பதியர், உடனே கதவை அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தை பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், விமான பணிப்பெண் ஒருவர் கழிவறை கதவுக்கு வெளியே பதற்றத்துடன் நிற்கிறார். இதைப் பார்த்த பயணிகள் ஆர்வத்துடன் கதவை திறப்பதற்காக காத்திருக்கிறார்கள். கதவை திறந்து பார்த்தபோது, தம்பதியினர் அலங்கோலமாக இருந்தனர். மற்ற பயணிகள் இதைப் பார்த்து முகம் சுளித்து கூச்சலிட, உள்ளே இருந்த நபர் விரைவாக கதவை அடைக்கிறார். அப்போது ஒரு பெண் ‘ஓ மை காட்’ என்று அலறுகிறார். விமான பணியாளர்கள் மற்றும் சில பயணிகள் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயில் கைவைத்தபடி தர்மசங்கடத்திற்கு ஆளாகினர்.


வீடியோ வைரலானவுடன், ஈஸிஜெட்டின் செய்தித் தொடர்பாளர் தி இன்டிபென்டன்ட் இடம் கூறியதாவது, “செப்டம்பர் 8 அன்று லூட்டனில் இருந்து இபிசாவுக்குச் சென்ற இந்த விமானத்தில் இருந்த இரண்டு பயணிகளின் நடத்தை காரணமாக நாங்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளோம் என்பதை உறுதிபடுத்தி உள்ளார். அந்த தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

From around the web