40 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்.. சாகச சவாரியின் போது விபரீதம்.. அதிர்ச்சி வீடியோ!

 
Mexico Mexico

மெக்சிகோவில் சாகச சவாரியின் போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் ஒருவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோவின் மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டான். 

Mexico

அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் அந்த சிறுவன் விழுந்தான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றினார். 

இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இச்சம்பவம் குறித்து  சிறுவனின் பெற்றோர் வழங்கிய தகவலில், சிறுவன் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால் சிறிது மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே அந்த சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்தவர்கள் பூங்காவை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பூங்காவில் சாகச சவாரி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web