மாயமான 26 வயது இளம்பெண்.. பாலைவனத்தில் ஆடையில்லாமல் சடலமாக மீட்பு.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

 
USA

அமெரிக்காவில் மாயமான இளம்பெண் பாலைவனத்தில் ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அமண்டா நெனிகர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அன்று மாயமானார். அதனைத் தொடர்ந்து, மார்ச் 7-ம் தேதி அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு 1.5 மைல் தொலைவில், அரிசோனாவின் சிபோலாவுக்கு வெளியே ஒரு மரத்தின் கீழ் அமண்டா உடலில் ஆடையின்றி சடலமாக கிடந்துள்ளார்.

dead-body

அவரது சடலம் கைப்பற்றப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து வெளியிடப்படவில்லை. எனினும் லா பாஸ் கவுண்டி அதிகாரிகள், மரணம் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க பிரேத பரிசோதனை செய்ய தாங்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கின்றனர்.

USA

இதற்கிடையில், இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு அமண்டாவின் 911 அவசர அழைப்பில், அவர் இருக்கும் இடத்தை விளக்க முயன்றது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web