15 வயது மாணவனை மயக்கி உல்லாசம்.. இங்கிலாந்து ஆசிரியைக்கு வாழ்நாள் தடை!

 
England

இங்கிலாந்தில் 15 வயது மாணவனை மயக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆசிரியை மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 74 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பக்கிங்காம்ஷைர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் கேண்டிஸ் பார்பர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், இவர் தன்னிடம் படித்த 15 வயது மாணவனுக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியும், ஆபாசமான வார்த்தைகள் கொண்ட மெசேஜ் அனுப்பியும் ஆசையை தூண்டி மயக்கியிருக்கிறார்.

Sex

பின்னர் அந்த மாணவனை தனியாக வயல்வெளிக்கு அழைத்துச் சென்று அவனுடன் உடலுறவு கொண்டுள்ளார்.  கடந்த 2018-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவனை மயக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு 6 ஆண்டுகள், 2 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஆசிரியை கேண்டிஸ் பார்பர் மீதான புகார் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்றது.

women-arrest

சமீபத்தில் நடந்த விசாரணையின் போது, கேண்டிஸ் பார்பர் காலவரையின்றி ஆசிரியர் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் ஆசிரியர் பணிக்காக விண்ணப்பிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web