8வது திருமணத்திற்காக காத்திருக்கும் 112 வயது மூதாட்டி.. மணமகன் கிடைக்கவில்லை என வேதனை!

 
Siti Hawa

112 வயதான மூதாட்டி சிட்டி ஹவா, தன்னுடைய  8வது  திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் தும்பட் பகுதியைச் சேர்ந்தவர் 112 வயது மூதாட்டி சிட்டி ஹவா. இதற்கு முன்னதாக 7 முறை சிட்டி ஹவா திருமணம் செய்து கொண்டுள்ளார், அதில் சில கணவர்கள்  உயிரிழந்து விட்டனர். மற்ற கணவர்கள் விவாகரத்து பெற்றுக் கொண்டுவிட்டனர். தற்போது 58 வயதாகும் அவரது இளைய மகனுடன் சிட்டி ஹவா வாழ்ந்து வருகிறார். இவருக்கு 5 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள் மற்றும் 30 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

Siti Hawa

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள யாருக்காவது விருப்பமிருந்தால், அதற்கு முன்வருமாறு அவர் தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால் அது அவருடைய 8-வது திருமணம் ஆகும். மேலும் தனக்கு சிறியளவில் பார்வை குறைபாடு மட்டும் இருப்பதாகவும், ஆனால் தினசரி  மற்ற வேலைகளை பார்ப்பதாகவும், முழு ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த மூதாட்டி கூறுகையில், “எனது முன்னாள் கணவர்களில் சிலர் உயிரிழந்து விட்டனர், மற்றவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் விவாகரத்து பெற்றோம். ஆனால், இப்போது நான் தனிமையில் இருக்கிறேன். எனக்குத் திருமணம் செய்து கொள்ள இப்போது மணமகன் தேவை என்றார். அவரது வேலைகளை அவரே செய்து கொள்கிறார். வயது முதிர்ந்த போதிலும், சிட்டி ஹவா இன்னும் சுறுசுறுப்பாகவே இருக்கிறாராம்.

Siti Hawa

இவர் திருமணத்திற்குத் தயாராக இருந்தாலும் கூட மணமகன்தான் கிடைக்கவில்லை என வேதனையில்  தவித்து வருகிறார். மேலும், வயது முதிர்வால் இவருக்கு மறதி சற்று அதிகரித்துவிட்டது. இருந்த போதிலும், இப்போதும் கூட மலேசிய வரலாற்றில் எப்போது என்ன சம்பவம் நடந்தது என்பதைத் துல்லியமாக அவர் கூறுகிறார். இவரது கதைதான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

From around the web