வாரம் 40 மணி நேரம் வேலை... வீட்டிலிருந்து பணி புரியும் சலுகை இல்லை... எலான் மஸ்க் அதிரடி!!

 
Twitter-confirms-sale-of-company-to-Elon-Musk

இனி வாரம் 80 மணி நேரம் வேலை இலவச உணவு இல்லை என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். 

எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது ட்விட்டர் இயக்குநர் குழுவை அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார். 

Twitter

அதனைத் தொடர்ந்து ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், இனி ட்விட்டர் ஊழியர்கள் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது.

கொரோனா பெருந்தொற்று காலமெல்லாம் முடிந்துவிட்டது. அதனால், இனி எந்த ஊழியருக்கும் வீட்டிலிருந்து பணி புரியும் சலுகை இல்லவே இல்லை. இதெற்கெல்லாம் ஒப்புக் கொண்டால் வேலைக்கு வரலாம். இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்கலாம். ராஜினாமாக்களை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார். 

Twitter

சர்வதேச அளவில் இந்நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். 

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70 சதவீதம் வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள். இதன் தொடர்ச்சியாக எஞ்சியிருக்கும் ஊழியர்களை நேரில் சந்தித்த மஸ்க், முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து வெளியேறிவரும் சூழலில் விரைவில் ட்விட்டர் திவாலாகும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.

From around the web