முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் Scandinavian நாடுகளைப் போல் தமிழ்நாடு முன்னேறுமா?
முதன் முதலாக அருமைச் சகோதரர் கார்த்திகேய சிவசேனாபதி யை கோவையில் சந்தித்த போது, அமெரிக்காவில் தங்கை கவிதா பாண்டியனை வை தெரியுமா? என்று கேட்டார். “அறிமுகம் செய்கிறேன், அவசியம் அவருடன் பேசுங்கள், அங்கே இருந்து கொண்டே, இங்கே அவருடைய மாவட்டத்தின் பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, தீர்வு காண்கிறார். மேலும், தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்கைப் மூலம் கணக்கு, ஆங்கிலம், தகவல் தொழில்நுட்ப பாடங்கள் எடுக்கிறார்,” என்றார். ஆர்வத்துடன் தொடர்பு கொண்டேன். நல்லதொரு புதிய உறவையும் பெற்றேன்.
அப்போது முதலாகவே, மக்கள் குறைகள் மீதான மனு என்றால் தங்கை கவிதா உடனடியாக நினைவில் வருவார். எங்கள் ஊர்ப்பகுதியின் சில தேவைகளுக்காக அரசை எப்படி அணுகலாம், சார்ந்த திட்டங்கள் என்ன? என அவரிடம் ஆலோசனை கேட்டுள்ளேன்.
இப்போது இன்னும் எளிமையாக மக்கள் குறைகளை நேரடியாக முதலமைச்சர் முகவரி துறைக்கே அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வுகள் காணப்படுவதும், மனுவின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளதோடு ஒரு முழுமையான Customer Care Center ஆக செயல்படுவதை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஒன்றிணைவோம் வா திட்டத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்திய போதே சொன்னேன். தன்னுடைய ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு மூலம் பல மாற்றங்களை முன்னெடுப்பார் என்று. Scandinavian நாடுகளைப் போல் அனைத்துக் குறியீடுகளிலும் தமிழ்நாடு முன்னேறுவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய ஆட்சி தொடரவேண்டும் பல்லாண்டுகள்.
மக்கள் குறைகளை முதலமைச்சர் முகவரி துறைக்கு பதிவேற்றுவதற்கான எளிய வழிகாட்டியாக, கத்தார் நாட்டில் வசிக்கும் http://www.worldbestyoubers.com/ ஞானகுமார் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார். தங்கள் பகுதியில் உள்ள மக்கள் குறைகளை நேரடியா முதலமைச்சர் முகவரி துறைக்கு எளிதாகத் தெரியப்படுத்த, ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த வீடியோ.
குறிப்பு: மேலே நான் குறிப்பிட்ட கவிதா பாண்டியன் தான் 2016ம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை தொடங்கி நடத்தியதோடு, பல்வேறு நகரங்களில் நடத்துவதற்கு வழிகாட்டியாகவும், ஒருங்கிணைப்பில் உறுதுணையாகவும் இருந்தார். அமெரிக்கத் தமிழர்களின் சமூகப் பங்களிப்பில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியதும் அந்தப் போராட்டங்கள் தான்- சற்று பின்நோக்கிய நினைவலைகளில், அது ஒரு படு பிஸியான காலம்
சில அறிமுகங்கள் பெரும் அத்தியாயத்தின் தொடக்கமாக அமைகிறது.
- இர.தினகர்
