நன்கொடை கோரும் விக்கிப்பீடியா.. பணம் செலுத்தும் கூகுள் நிறுவனம்!

 
wiki-google

இலாபநோக்கமற்ற ஓர் அமெரிக்கத் தொண்டு நிறுவனமான விக்கிமீடியா நிறுவனம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் ஜிம்மி வேல்சினால், 2003-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக பயனர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை வழங்கி வந்த விக்கிப்பீடியா நிறுவனம், சமீப காலங்களாக தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக விக்கிப்பீடியா பயனர்களிடம் நன்கொடை கோரி வருகிறது.

google-wiki

இதற்காக விக்கிமீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிமீடியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவக்கியது. இந்த நிறுவனத்தில் முதல் வாடிக்கையாளராக “கூகுள்” இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேடுபொறியில் விக்கிபீடியாவின் கட்டுரைகள் மற்றும் தொகுப்புகளை பயன்படுத்துவதற்காக விக்கிமீடியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் எவ்வளவு தொகை கூகுள் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறித்து தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

google

"எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அணுகலையும் விரிவுபடுத்துவதற்கான எங்கள் இலக்குகளைத் தொடர விக்கிமீடியா அறக்கட்டளையை நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வருகிறோம்" என்று கூகுளின் டிம் பால்மர் கூறினார்.

From around the web