சீனாவில் வானிலை மாற்றம்... திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு! 12 பேர் பலி!

 
China-floods

சீனாவில் பரவலாக கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில், நேற்று திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கனமழை பெய்ததில், ஒன்றரை நாளில் 98.9 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பெய்யும் சராசரி மழையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

China-floods

இந்நிலையில் திடீரென பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில், மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகமாகி வருகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெப்பமான காற்று அதிக நீரைச் சேமித்து வைக்கும். அது வெளியிடப்படும் போது பெரிய மேக வெடிப்புகளுக்கு வழி வகுக்கும் என்றும் கூறி உள்ளனர்.

china-floods

வெப்ப அலைகள் அமெரிக்காவின் தெற்குப் பகுதியையும் தாக்கியுள்ளன. வரும் நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி (100 F) க்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web