ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் காலமானார் - அரசு, தனியார் நிறுவனங்கள் 3 நாட்கள் மூட உத்தரவு

 
Death-of-UAE-President

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலிஃபா பின் ஷயத் அல் நயான், உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

அதிபரின் மறைவுக்கு,  நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் 3 நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3 முதல் ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றினார். அவர் தனது தந்தை மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948-ம் ஆண்டு பிறந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு அமீரக நாட்டின் 2வது அதிபராகவும், அபுதாபி எமிரேட்டின் 16 வது ஆட்சியாளராகவும் இருந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவரான பிறகு, ஷேக் கலீஃபா மத்திய அரசு மற்றும் அபுதாபி அரசாங்கத்தின் பெரிய மறுசீரமைப்புக்கு தலைமை வகித்தார்.

ஷேக் கலீஃபா ஒரு நல்ல அதிபராகவும், தனது மக்களின் விவகாரங்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டவராகவும் இருந்தார். அவரது ஆட்சியின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

From around the web