கார் மீது லாரி மோதல்! அமெரிக்காவில் 4 தமிழர்கள் பலி!

 
Fatal

அமெரிக்காவில்  சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தமிழர்கள் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. அரிசோனா மாநிலத்தில் உள்ள செடோனா நகரில் ஃப்ரிவே I - 17 லிருந்து வந்த லாரி ஒன்று கார் மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கார் மீது லாரி ஏறிவிட்டதால் கார் நசுங்கியதில் உள்ளே இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக அரிசோனா போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரியை ஓட்டி வந்த ட்ரைவர் எந்த காயமும் இல்லாமல் தப்பியுள்ளார். ப்ரேக் பிடிக்காததால் இந்த விபத்து நடந்து விட்டதாக அந்த லாரி ட்ரைவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களின் விவரம் அரிசோனா மாநில போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 24 வயது ஆதிஷ் நாகராஜன், 23 வயது தினேஷ் நாகராஜன், 53 வயது ஞானப்பன் நாகராஜ, 45 வயது விஜயலஷ்மி கோபால் ஆகிய நால்வரும் சம்பவ இடத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிஷ் மற்றும் தினேஷ் டெம்பே நகரில் வசித்து வந்துள்ளனர். ஞானப்பன் மற்றும் விஜயலஷ்மி இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது/

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் லாரி மோதிய விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web