செஸ் போட்டியில் விபரீதம்... 7 வயது சிறுவனின் விரலை உடைத்த ரோபோ!! வைரல் வீடியோ

 
chess

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த செஸ் போட்டியில் 7 வயது சிறுவனின் விரலை ரோபோ உடைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய செஸ் கூட்டமைப்பு சார்பில் செஸ் போட்டி கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் 3 இளம் சிறுவர்களை எதிர்த்து ரோபோ விளையாடியது. இதில் 7 வயதான கிறிஸ்டோபர் ரோபோவை எதிர்த்து விளையாடினான்.

chess

இந்த நிலையில், ரோபோ தனது நகர்வை செய்ய சிறுவன் நேரம் கொடுக்காததால், அவரின் விரல் மீது தனது இயந்திர கைகளால் அழுத்தியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ரஷ்ய செஸ் சங்கத்தின் துணைத் தலைவர் செர்ஜி ஸ்மாகின் கூறுகையில், கிறிஸ்டோபர் விளையாட்டுக்கான பாதுகாப்பு நெறிமுறையை மீறியதால், சிறுவனின் விரலில் ரோபோ அழுத்தியது என்று கூறினார். சிறுவன் குறிப்பிட்ட நேரத்திலிருந்து வேகத்தை மாற்ற ஆரம்பித்தான். இந்த நேரத்தில் காய் நகர்த்துவது ரோபோவின் முறை என்றார்கள். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் மிகச் சில சந்தர்ப்பங்களில் நடப்பது இதுவே முதல் முறை. குழந்தையின் காயம் குறித்து ஸ்மாகின் கூறுகையில், கவலைப்பட ஒன்றுமில்லை. காயத்திற்குப் பிறகும் சிறுவன் தொடர்ந்து விளையாடி, கையெழுத்துப் போட்டு, கொண்டாட்டங்களில் கலந்து கொண்டான் என்று கூறினார்.


கிறிஸ்டோபர் மாஸ்கோவில் 9 வயதுக்குட்பட்ட 30 வலிமையான செஸ் வீரர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரது விரல் உடைந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

From around the web