அமெரிக்காவில் தொடரும் சோகம்... ‘கிளப் கியூ’ இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி, 18 பேர் காயம்!

 
Club Q

அமெரிக்காவில் ‘கிளப் கியூ’ கிளப்பில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தில் உள்ள கொலோராடா ஸ்பிரிங்ஸ் நகரத்தில் ‘கிளப் கியூ’ என்ற நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நைட் கிளப்பிற்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாகவும் 18 பேர் காயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

club Q

டிரான்ஸ்போபியா என்று கூறப்படும் பாலியல் அடையாளம் காரணமாக கொல்லப்படுபவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 20-ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களின் நினைவு தினம் ( TDOR) அனுசரிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், கிளப் கியூ நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. 


துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால் அந்த நைட் கிளப் அமைந்து இருக்கும் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

From around the web