பிளாட்பாரத்தில் நின்றிருந்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்.. பதறவைக்கும் வீடியோ!!

 
candela-woman-escapes-death-stumble-faint-rails-buenos-aires

ரயில் நடைமேடையில் காத்திருந்த பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்து ஓடும் ரயிலின் குறுக்கே விழுந்த வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினாவின் கோன்சலஸ் கேட்டனில் உள்ள ரயில் நிலையத்தில் கேண்டெலா என்ற பெண் பயணி ஒருவர் ரயிலுக்கு காத்திருந்தார். நீண்ட நேரம் ரயிலுக்கு காத்துநின்ற பெண்ணுக்கு சிறிது நேரத்தில் தலை சுற்றியது. அந்நேரம்பார்த்து ரயில் நிலைய தண்டவாளத்தில் ரயில் சென்றுக்கொண்டிருந்தப்போது திடீரென அப்பெண் மயக்கநிலை அடைந்து தடுமாறி ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரயிலை நிறுத்தினர். ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் சிக்கி லேசான காயத்துடன் தப்பிய அப்பெண்ணை ரயில்வே காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்குள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தபின் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

சிகிச்சைக்கு பிறகு அப்பெண் கூறியதாவது, எனக்கு மயக்கம்  வருகிறது என முன்னால் இருப்பவரை நான் எச்சரிக்க முயற்சித்தேன். ஆனால் நான் ரயிலில் மோதிய தருணம் கூட நினைவில் இல்லை. நல்லவேளையாக இப்போது உயிருடன் இருக்கிறேன் என்றார். கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த விபத்தின் பதைபதைக்கும் காட்சிகளை அந்நாட்டு போக்குவரத்துத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

From around the web