இந்த வாழ்க்கை ரொமான்ட்டிக்கா இருக்கு... 50’ஸ் ஸ்டைல் தாயாக மாறிய அமெரிக்க பெண்!!

 
California

பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக மாறியதால், அவர்களின் வாழ்க்கை பெரிய அளவில் மேம்பட்டது. வேலை செய்யும் இடங்களுக்கு அதிகமாக வர ஆரம்பித்தனர். இருப்பினும், குடும்பம் மற்றும் குழந்தைகள் என்று வரும்போது தங்கள் தொழிலையும் கனவுகளையும் விட்டுவிட்டு வீட்டில் இருக்க வேண்டிய பெண்களும் உள்ளனர். இருப்பினும், தங்கள் விருப்பப்படி வேலையை விட்டுவிட்டு, அப்படி வாழ்பவர்கள் அரிது.

அதன்படி அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் அலெக்சியா டெலாரோஸ் (29). இவர், ஆயிரக்கணக்கான டாலர்களில் வருமானம் ஈட்டக் கூடிய வேலையை ராஜினாமா செய்துவிட்டு 50-களில் இருந்ததை போல கணவர், 2 குழந்தைகள் மற்றும் வீட்டை கவனித்துக் கொண்டு வருகிறார். அலெக்சியா மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளில் இந்த பழக்கம் தற்போது பெரும்பாலான பெண்களிடையே வேகமாக பரவி வருகிறது. அதனை ‘டிரேட்வைவ்ஸ்’ என்றும் அழைக்கிறார்கள். அதாவது, பெண்கள் தங்களுக்கான பாரம்பரிய, கலாசாரங்கள் அடங்கிய செயல்களில் ஈடுபடுவதை குறிக்கிறது.

california

தொழிலுக்கு பதில் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பால் தங்களுக்கான உரிமைகள் எதுவும் பறிபோய்விடவில்லை என்றும் பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த ‘டிரேட்வைவ்ஸ்’ முறை ஏதோ திடுதிப்பென முளைத்துவிடவில்லை. கடந்த 2018-ம் ஆண்டில் இருந்தே இந்த ‘டிரேட்வைவ்’ வார்த்தை ட்ரெண்டிங்கிலேயே இருப்பதாக கூகுள் ட்ரெண்ட்ஸின் தரவுகள் மூலம் அறிய முடிகிறது.

இது குறித்து அலெக்ஸியா வெளியிட்டுள்ள பதிவில், “குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் வேலையில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக இருந்ததாலேயே இல்லத்தரசியாக இருக்க முடிவெடுத்தேன். என் அம்மாவும் வேலைக்கு சென்றார். அதேவேளையில் குடும்பம், நண்பர்கள் என மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். என்னுடைய குடும்பத்திற்கு பாரம்பரியமான ஆளாக நான் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

முழு நேரமாக கணவன் வேலை பார்ப்பதும், மனைவி வீட்டில் குழந்தைகள் அரவணைத்து கவனிப்பது போன்ற இந்த 50’ஸ் ஸ்டைல் குடும்ப வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது ரொமான்ட்டிக்காகவும் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். அலெக்ஸியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு 12 ஆயிரத்துக்கும் மேலான ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக தனது குடும்பத்துடன் செலவழிக்கும் நேரத்தை ஃபோட்டோ, வீடியோவாக பதிவிட்டு பகிர்ந்து வருகிறார்.

இல்லத்தரசியாக இருக்கும் அலெக்ஸியாவின் முடிவுக்கு பலரும் பலதரப்பட்ட கருத்துகளை முன்வைத்திருந்தாலும் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஆணித்தரமாகவே அலெக்ஸியா தெரிவித்திருக்கிறார்.

அதாவது தான் எந்த வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும், கூடாது என்பதை முடிவெடுக்கும் முழு உரிமையும் தனக்கு இருக்கிறது, குழந்தைகளை கவனித்துக் கொண்டே வேலைக்கு போவதும், வீட்டிலேயே இருந்து குழந்தைகள், குடும்பத்தை மட்டும் கவனித்துக்கொள்வதும் அவரவர்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவு என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அலெக்ஸியாவின் பதிவுகள் இருந்து வருகின்றன.

From around the web