ஓடும் டிரக் மீது ஏறி வீடியோ எடுத்தபடி நடனமாடிய இளைஞர்... நொடிபொழுதில் உயிரிழந்த சோகம்!! அதிர்ச்சி வீடியோ

 
Texas

அமெரிக்காவில் ஓடும் டிரக்கின் மேல் நடனமாடிய இளைஞர் மேம்பாலத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகர் சாலையில் 18 சக்கரம் கொண்ட டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தின் மேல் இளைஞர் ஒருவர் நடனமாடிக் கொண்டு தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, வாகனம் மேம்பாலத்திற்கு அடியில் செல்லும் போது குனிந்து தப்பித்துக் கொண்டுள்ளார். பிறகு மீண்டும் வந்த பாலத்தைக் கவனிக்காமல் நடனமாடிக் கொண்டே இருந்தார். இதனால் அவர் பாலத்தின் மீது மோதி சாலையின் கீழே விழுந்துள்ளார்.

Texas

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து இளைஞர் யார் எனவும், எதற்காக ட்ரக் மேல் நடனமாடினார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து ஹூஸ்டன் போலீசார் கூறுகையில், கடந்த 10-ம் தேதி அன்று காலை 11.35 மணி அளவில் யுஎஸ்-59 ஈஸ்டெக்ஸ் ஃப்ரீவேயில் டிரக் ஓட்டுநருக்கு தெரியாமல் டிரக்கின் மேல் ஏறி நடனமாடிக் கொண்டிருந்த 25 வயது இளைஞன் கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த கொடூர சம்பவத்தை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே இளைஞர்கள் பலரும் சுரங்கப்பாதை, கார், ட்ரக் போன்ற வாகனங்கள் மீது ஏறி வீடியோ எடுத்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

From around the web