அமெரிக்காவின் மறுபிரவேசம்.. தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனல்டு டிரம்ப் !!

 
Trump

2024-ல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபரான டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளராக கடந்த 2016-ம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றாா். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் - அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Trump

அதேவேளை, 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் தேர்தெடுக்கப்பட்டார். ஆனால், ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தோ்தலில் மோசடி நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதனிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

Trump

இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி ஒஹியோ மாகாணத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார். அப்போது, நான் வரும் 15-ம் தேதி செவ்வாய்கிழமை ப்ளோரிடா மார்-ஏ-லகோவில் வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன் என்றார்.

இந்நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்து இருக்கிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களையும் தாக்கல் செய்தார். தனது ஆதரவளர்கள் மத்தியில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் மறுபிரவேசம் தற்போதில் இருந்தே தொடங்குகிறது என்றார்.

From around the web