போதையில் காதலனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு நிர்வாணமாய் தப்பிய மாடல் அழகி!! பிரசிலில் அதிர்ச்சி சம்பவம்!

 
Brazil

குடிபோதையில் பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனது காதலனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓட்டலில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ். இவர் தனது காதலரான ஜோர்டான் லோம்பார்டி (40) என்பவருடன் பிரேசிலியாவில் உள்ள பார்க்வே ஓட்டலில் தங்கி இருந்தார். அழகி மார்செல்லா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலையில், அவர்களுக்குள் சண்டை ஏறபட்டு உள்ளது. 

Brazil-model

இதனால் ஆத்திரமடைந்த மார்செல்லா கைத்துப்பாக்கியை வைத்து ஜோர்டானை சுட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து நிர்வாணமாக ஓட்டலை விட்டு வெளியேறி காரை எடுத்துள்ளார். தடுக்க வந்த ஊழியரை காரில் இடித்துள்ளார். பின்னர் சாலையில் பள்ளி பேருந்து ஒன்றின் ஓட்டுனரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

Brazil

இதில் படுகாயம் அடைந்த காதலர் லோம்பார்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, தப்பி ஓடிய மாடல் அழகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். லோம்பார்டியாவும் மார்செல்லாவும் ஜனவரி 2023-ல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தாக கூறப்படுகிறது.

From around the web