உலகிலேயே மிக நீளமான கண்ணாடி பாலம் வருகிற 30-ம் தேதி திறப்பு!! எங்கு தெரியுமா.?

 
Longest-glass-bridge

உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வருகிற 30-ந் தேதி திறந்து வைக்கப்படுகிறது.

வியட்நாமில் ‘பாக் லாங்’ என்று அழைக்கப்படும் இந்த பாலம் 2073.5 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ந் தேதி கொண்டாடப்பட உள்ள மறு ஒருங்கிணைப்பு தினத்தின் போது இந்த பாலம் திறந்து வைக்கப்பட உள்ளது.

Longest-glass-bridge

உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனைக்காக இந்த பாலம் கின்னஸ் அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜியில் 1410.7 அடி நீளமுள்ள கண்ணாடி பாலம் தான் தற்போது உலகின் நீளமான கண்ணாடி பாலம் என்று சாதனை படைத்துள்ளது.

From around the web