மனைவியை கழிவறையில் வைத்து அடித்தே கொலை செய்த கணவன்!! தேனிலவில் நடந்த கொடூரம்!!

 
honeymoon-murder

தெற்கு பசிபிக் கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட பிஜி உள்ளது. இந்நாட்டில் உள்ள தீவுகள் சுற்றுலா தலங்களாக மக்களை கவர்ந்து வருகிறது. புதிதாக திருமணம் முடித்தவர்கள் தேனிலவை அங்கு சென்று கொண்டாடுவது அதிகம். இந்த நிலையில் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வசித்து வரும் இளம்பெண் கிரிஸ்டி சென் தனது கணவன் பிரிட்லி ராபர்ட் டாசனுடன் தேனிலவை கொண்டாட கடந்த 7-ம் தேதி பிஜி நாட்டில் உள்ள ட்ரூட்லி தீவுக்கு சென்றார்.

honeymoon-murder

கணவன், மனைவி இருவரும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தனர். தேனிலவை கொண்டாட வந்த இளம் தம்பதியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் பிரிட்லி தனது மனைவி கிரிஸ்டினாவை கழிவறையில் வைத்து கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த கிரிஸ்டினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதைத்தொடர்ந்து பிரிட்லி அந்த தீவில் இருந்து தப்பி துடுப்பு மற்றும் படகை எடுத்துக் கொண்டு அடுத்த தீவுக்கு தப்பிச் சென்றார். ஓட்டலில் அவர்கள் தங்கி இருந்த அறை ஒரு நாள் முழுவதும் திறக்கப்படவில்லை. அடுத்த நாளும் அதே நிலை நீடித்ததால், சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர் உள்ளே சென்று பார்த்த போது கிரிஸ்டினா கழிவறையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

honeymoon-murder

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து பிரிட்லியை தேடி வந்தனர். இதற்கிடையில் பிரிட்லி 2 கிலோ மீட்டர் படகில் பயணித்து மடஹவெலியூ என்ற தீவுக்கு சென்றடைந்தார். சந்தேகத்திற்கிடமாக அந்த தீவில் சுற்றிதிரிந்த பிரிட்லி பற்றிய தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீஸ் பிரிட்லியை கைது செய்தனர்.

தேனிலவை கொண்டாட வந்த இடத்தில் மனைவியை கணவன் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web