தலையில் குண்டு பாய்ந்தது காருக்குள் உயிருக்கு போராடிய இந்தியர் பலி!! அமெரிக்காவில் பரபரப்பு

 
25-year-old-indian-national-in-us-found-injured-inside-suv-pronounced-dead

அமெரிக்காவில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் காடன் அவன்யூ பகுதியில் வசித்து வருபவர் சாய் சந்திரன் (25). தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இவர், எம்எஸ் படிப்பை முடித்துவிட்டு கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார்.

25-year-old-indian-national-in-us-found-injured-inside-suv-pronounced-dead

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் தனது காரில் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாய் சந்திரனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

gun

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சாய் சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சாய் சந்திரன் உயிரிழப்பிற்க்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரை யாரேனும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web