அரசு நிகழ்ச்சியில் பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்த அதிபர்... லீக் ஆயிடுச்சு வீடியோ!!

 
Sudan

அரசுபொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சூடான் அதிபர் தான் அணிந்திருந்த பேண்ட்டிலேயே மேடையில் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வடக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான், 2011-ம் ஆண்டு சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வருபவர் சல்வா கீர். இவர் கடந்த டிசம்பர் மாதம் அங்கு நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பங்கேற்றிருந்தார். விழாவில் அந்நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது அதிபர் எழுந்து நின்று கொண்டு, அதற்கு மரியாதை செலுத்தினார்.

sudan

அப்போது அவருக்கு சிறுநீர் வந்துள்ளதாக தெரிகிறது. அந்த நேரத்தில், தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் நேரத்திலேயே தான் அணிந்திருந்த பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார். தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தி கொண்டிருந்த அதே நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது, அங்கிருந்த டிவி கேமராக்களிள் பதிவாகிவிட்டது.

ஆனால், அந்த நாட்டு ஊடகங்களில் இந்த காட்சி ஒளிபரப்பவில்லை. அதையும் மீறி, இந்த வீடியோ எப்படியோ வெளியே லீக் ஆகிவிட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்த பல நாட்களுக்கு பிறகு அதிபர் சல்வா கீர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பலரும் அதிபரின் உடல் நிலை குறித்து விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனையடுத்து, வீடியோ வெளிட்டதாக கூறி அரசு ஊடகத்தில் பணியாற்றி வரும் ஜோபல் டோம்பே, விக்டர் லாடோ, ஜோசப் ஆலிவர், ஜேக்கப் பெஞ்சமின், முஸ்தபா ஒஸ்மான், செர்பெக் ரூபன் உட்பட 7 பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த நாட்டின் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு கைது செய்யப்பட்டுள்ள 7 பத்திரிகையாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

From around the web