அதிகாலையில் அதி பயங்கர நிலநடுக்கம்.. நடுங்கிய மக்கள்! சுனாமி எச்சரிக்கை இல்லை

 
INdonesia

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் இன்று காலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ‘ரிங் ஆப் பயர்’ மீது இருப்பது காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.

Indonesia

இந்த நிலையில், மேற்கு இந்தோனேசியாவில் இன்று (ஜன. 16) அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், கடுமையான பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில் ஆச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் (30 மைல்) மையமாக இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் மையத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

நவம்பர் 21 அன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் குறைந்தது 331 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 600 பேர் காயமடைந்தனர். 2018-ம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் கொல்லப்பட்டனர்.

2004-ம் ஆண்டில், மிகவும் சக்திவாய்ந்த இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம், ஒரு டஜன் நாடுகளில் 2,30,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற சுனாமியை ஏற்படுத்தியது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் இருந்தவர்கள் ஆவர்.

From around the web