பெட்ரோல், டீசல் மீதான வரிகள் 3 மாதங்களுக்கு ரத்து!! எங்கு தெரியுமா?

 
us-petrol

அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும் திட்டத்தினை அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

Joe-Biden

உக்ரைன் போரின் காரணமாக அமெரிக்காவில் விலைவாசி உயர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 4.84 சென்ட், டீசல் மீது லிட்டருக்கு 6.45 சென்டும் மத்திய அரசு விதியாக விதிக்கப்படுகிறது. இவற்றை ரத்து செய்தால் பெட்ரோல், டீசல் விலைகள் சுமார் 3.6 சதவீதம் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

crude-oil

இதன்காரணமாக, நேற்று சர்வதேச சந்தைகளில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர் சரிந்து 108 டாலராக குறைந்து தற்போது 110 டாலராக உள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த வாரத்தில் 122 டாலராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

From around the web