ஆற்று பாலத்தில் சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து... அலறி அடித்து உயிர் தப்பிய பயணிகள்!!

 
Boston

அமெரிக்காவில் பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென தீபிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகணத்தின் பாஸ்டன் புறநகர் பகுதியில் ஆற்றுக்கு நடுவே உள்ள பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென தீப்பற்றியது.

boston

வெலிங்டன் மற்றும் அசெம்பிளி ஸ்டேஷன் இடையே உள்ள பாலத்தில் சென்ற போது ரயிலின் முன் பகுதியில் தீப்பற்றியதை அறிந்த பயணிகள், உடனடியாக ஜன்னல் வழியாக வெளியேறி உயிர்தப்பினர்.

ரயிலில் பயணித்த 200 பேர் பத்திரமாக வெளியேற்றப் பட்டதாகவும், வெளியேறிய போது ஆற்றில் குதித்த பெண் பயணி சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

From around the web