ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் துப்பாக்கி சூடு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலி!

 
Kabul

ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Afghan

இந்த நிலையில், காபூலின் மத்திய பகுதியில் உள்ள கவ்ஜா ரவாஷ் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம் போல் தொழுகை நடைபெற்றது. அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் மசூதிக்கு வந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மசூதிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த பயங்கரவாதிகள் சிலர் தொழுகை செய்து கொண்டிருந்தவர்களை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இந்த கொடூர தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

dead-body

முதற்கட்ட விசாரணைகளின்படி, இந்த சம்பவம் தனிப்பட்ட விரோதத்தால் தூண்டப்பட்டதாக தலிபான் அதிகாரி கூறினார். தாக்குதல் நடத்தியவரை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

From around the web