அதிர்ச்சி! ட்விட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து பணி நீக்கம் நடவடிக்கையில் இறங்கிய கூகுள்..! கலக்கத்தில் ஊழியர்கள்!

 
google

ட்விட்டர், மொட்ட நிறுவனங்களில் பணி நீக்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது கூகுள் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார். 

Sundar-pichai

அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தாய் நிறுவனமான மெட்டா மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை மெட்டா பணியில் இருந்து நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 13 சதவீதம் ஆகும். 2022-ம் ஆண்டில் இதுவரை 1.35 லட்சம் ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுகின்றது.

இதற்கிடையில் கூகுள் நிறுவனம், தனது தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் ஆட்குறைப்பில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளது. யாரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப் போவதில்லை என்றும், பணியாளர்களின் செயல் திறன்கள் கண்காணிக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டில் செயல் திரை கண்காணிக்க உள்ளதாகவும், 2023-ம் ஆண்டில் 10 ஆயிரம் ஊழியர்கள் வரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Layoff

பணியில் இருந்து விடுக்கப்படும் ஊழியர்களுக்கு ஊக்க தொகை, பங்குகள் உள்ளிட்டவை வழங்குவதை தவிர்க்கும் வகையில், செயல் திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் பணியில் இருந்து நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மொத்த பணியாளர்களில் 2 முதல் 6 சதவீதம் பணியாளர்கள் இந்த ஆட்குறைப்பின் எண்ணிக்கையில் வருவார்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்க பங்கு பரிவர்த்தனை தகவலின் படி, அமெரிக்காவில் உள்ள 20 மிக பெரிய நிறுவனங்களின் ஊதியத்தை விட 153 சதவீதம் ஊதியம் கூகுள் அதன் ஊழியர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web