அமெரிக்காவில் பரபரப்பு! 6 ஊழியர்களை சுட்டுக்கொன்று சூப்பர் மார்க்கெட் மேலாளர் தற்கொலை!

 
Walmart

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் மேலாளர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் செசப்ஹு நகரில் வால்மார்ட் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

walmart

அப்போது, அந்த சூப்பர் மார்க்கெட் மேலாளர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். மேலாளர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தலை தெறிக்க ஓடினர். ஆனால், தொடர்ந்து மேலாளர் துப்பாக்கிச்சூட்டு நடத்தினார். 

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால், மேலாளர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சூப்பர் மார்க்கெட் மேலாளரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 


இதையடுத்து, போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் 2022-ம் ஆண்டில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது துப்பாகிச் சூடு வன்முறை  சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web