கை நடுக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ரஷ்ய அதிபர்! புதினுக்கு ஏற்பட்ட நிலைமை! வெளியான வீடியோ

 
vladimir-putin-shakes-uncontrollably-new-video

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் கை, கட்டுக்கடங்காமல் நடுங்கும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் போருக்கு மத்தியில், விளாடிமிர் புதின் ஒரு தீவிரமான நிலையில் இருப்பதாகவும், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. அவருக்கு சுயமாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கை கால்கள் நடுக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

இதுபோன்ற வதந்திகளுக்கு மத்தியில், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடனான ஒரு சந்திப்பில், புதின் கட்டுப்பாடில்லாமல் நடுங்கும் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த காட்சிகளில், அவர் தனது கையை தனது மார்பில் அழுத்தமாக அசைப்பதை தடுக்கும் முயற்சியைக் காட்டுகிறது.

இதனிடையே, புதின் கால்கள் தொடர்ந்து அசைந்து கொண்டே இருக்கும் மற்றொரு வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சமீபத்தில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம் சென்றிருந்த புதின், உதட்டைக் கடித்துக் கொண்டு படபடப்புடன் காணப்படும் காட்சிகள் வெளியாகின. இவையனைத்தும் என்னதான் ஆயிற்று புதினுக்கு என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

அந்த வீடியோவில், ஈஸ்டர் ஆராதனையில் பங்குகொண்ட புதின், ஓரிடத்தில் அமைதியாக நிற்காமல் உடலை அசைத்துக் கொண்டும், உலர்ந்த வாயை ஈரப்படுத்திக் கொண்டும் நிற்பதைக் காணலாம். வாய் உலர்ந்துபோதல் பார்க்கின்சன் நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும்.


 

From around the web