தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! மக்கள் பீதி! வைரல் வீடியோ

 
Taiwan

தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12.14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தைவானின் தென்கிழக்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடற்கரையை ஒட்டிய பகுதியில் 300 கிலோ மீட்டர் (190 மைல்) தொலைவில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. ஆனால் பின்னர் எச்சரிக்கையை நீக்கியது. ஜப்பானின் வானிலை நிறுவனம் ஒகினாவா மாகாணத்தின் ஒரு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையை நீக்கியது.

Taiwan

தைவானின் யூஜிங் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கிழக்கு சீனக் கடலில் உள்ள மியாகோ தீவுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தெற்கு தைவானில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை புகைப்படங்கள் காட்டுகின்றன. ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளில் மூன்று பேர் சிக்கியுள்ளதாக தீவின் அதிகாரப்பூர்வ மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அப்பகுதியில் ரயில் தடம் புரண்டதால் சுமார் 20 பயணிகள் வெளியேற்றப்பட்டனர், ஆனால் இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தைவான் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2016-ல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், அதே நேரத்தில் 1999-ல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

From around the web