பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி!!

 
Pakistan

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக நிவாரணம் வழங்கச் சென்றவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பலுசிஸ்தான், சிந்து, கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே பாகிஸ்தான் ராணுவம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Pakistan

இந்த நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவிலிருந்து சில உயர் அதிகாரிகளுடன் ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்திற்கான சிக்னல் கிடைக்கவில்லை. ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் 6 வீரர்கள் என 12 பேர் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டர் காணாமல் போனதும் தொடங்கிய மீட்பு நடவடிக்கைகள் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டு, தேடுதல் பணி இன்று காலை மீண்டும் தொடங்கும் என்று காவல்துறை அதிகாரி பர்வேஸ் உம்ரானி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் நேற்று இரவு தெரிவித்திருந்தார்.

Pakistan

இந்த நிலையில், இன்று காலை ஹெலிகாப்டர் விபத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ள மீட்புப் பணியின் போது பலுசிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் சர்ஃப்ராஸ் உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்துவிட்டனர்.

From around the web