ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல்: குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் பலி!!

 
pakistan-bombs-afghan-border-areas-after-attack-on-convoy-civilians-dead

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்கிழக்கு கோஸ்ட் மற்றும் கிழக்கு குனார் மாகாணங்கள் மீது பாகிஸ்தான் படைகள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியான பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதேபோல், கோஸ்ட் பகுதியில் உள்ள வசிரிஸ்தானில் இருந்து குடியேறியவர்களின் முகாமை குறிவைத்து பாகிஸ்தான் படைகளின் விமானம் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அரசும், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகமும் விளக்கம் அளிக்கவில்லை.

From around the web