ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் தேர்வு

 
Sheikh-Muhammed

ஐக்கிய அரபு அமீரக அதிபராக இருந்த ஷேக் கலிஃபா பின் சையத் மறைவை தொடர்ந்து புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா பின் சையத் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, இன்று நடைபெற்ற இறுதிச் சடங்கில் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 61-வயதான  ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராக உள்ளார்.

இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். அவர் மறைந்த ஷேக் சயத் பின் சுல்தான் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் அதிபராக இருந்தவரின் 2-வது மகன் ஆவார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் சகோதரர் ஆவார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராணுவத்தில் பல பொறுப்பான பதவிகள் வகித்துள்ளார். எமிரேட் அளவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலையிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய அளவிலும் பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web