நேபாள விமான விபத்து: பரபரப்பு லைவ் வீடியோ காட்சி

 
Nepal

நேபாள நாட்டில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்கு சில நொடிகள் முன்னர் விமானத்தில் பயணித்த பயணி எடுத்த லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் எட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், 68 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் இந்தியர்கள். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Nepal

இந்த சூழலில் விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தரையிறங்கும் காட்சியை லைவ் வீடியோவாக பதிவு செய்துள்ளார். சில நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவின் இறுதி சில நொடிகள் அதிர்ச்சிகரமாக உள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரிக்க நேபாள அரசு குழு அமைத்துள்ளதாக தெரிகிறது. அதோடு இன்று ஒருநாள் துக்கமும் அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல். அமைச்சரவை கூட்டமும் கூட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், 2 தென் கொரியர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அர்ஜென்டினா, அயர்லாந்தை சேர்ந்த தலா ஒருவர் என 15 வெளிநாட்டு பயணிகள் பயணித்துள்ளதாக யெட்டி விமான நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web