ஃபேஸ்புக்கில் தனது மரண தேதியை முன்பே குறிப்பிட்டு... உயிரிழந்த பருவகால செயற்பாட்டாளர்!!

 
Wynn-Alan-Bruce

அமெரிக்காவில் பருவகால செயற்பாட்டாளர் ஒருவர் தனது மரண தேதியை முன்பே குறிப்பிட்டதுபோல் உயிரிழந்து உள்ளார்.

அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள உச்சநீதிமன்றம் கட்டிடத்தின் முன் பூமி நாளான கடந்த 22-ந் தேதி மாலை 6.30 மணியளவில் நபர் ஒருவர் தன் மீது திடீரென்று தீ வைத்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலராடோ மாகாணத்தின் போல்டர் பகுதியை சேர்ந்த அவரது பெயர் வின் புரூஸ் (வயது 50).

அவரது பெயரிலான ஃபேஸ்புக் பக்கத்தில் வின் புரூஸ் தன்னை ஒரு புத்த மதத்தினை சேர்ந்தவர் என்றும் பருவகால செயற்பாட்டாளர் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரிலேயே ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தீ பற்றிய எமோஜி ஒன்றையும், 4/22/2022 என்ற அவரது மரண நாளையும் குறிப்பிட்டு உள்ளார்.

இதுபற்றி புத்த மத சங்கத்தின் பெண் சாமியாரான டாக்டர் கிரித்தீ கூறும்போது, புரூசை எனக்கு தெரியும். அவர் என்னுடைய நண்பர். இது தற்கொலை அல்ல. பருவகால நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக புரூஸ் மேற்கொண்ட இரக்கத்துடன் கூடிய அச்சமற்ற செயல் என்று தெரிவித்துள்ளார்.

பருவகால நெருக்கடி பற்றிய தகவலை நாங்கள் ஒன்றாகவே சேகரித்து வந்தோம். ஆனால், இந்த செயலை செய்வதற்கு புரூஸ், கடந்த ஓராண்டாக திட்டமிட்டு வந்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

From around the web