சோமாலியாவில் கண்ணிவெடியை வெடிக்கச் செய்து பயங்கரம்; 10 ராணுவ வீரர்கள் பலி!!

 
Landmine-attack-in-Somalia-10-soldiers-killed

சோமாலியாவில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி 10 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சோமாலியாவின் தெற்கே ஷாபெல் பகுதியில் ஜவுகர் மாவட்டத்தில் இருந்து பலாட் மாவட்டத்திற்கு ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென கண்ணிவெடி ஒன்று வெடிக்க செய்யப்பட்டு உள்ளது.

இதில், வாகனத்தில் இருந்த 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ரஷியாவில் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

சோமாலியாவில் ஊடுருவிய அல்-ஷபாப் இயக்கத்தினர் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.நா.வின் மனிதநேயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தும் வகையிலும் அந்த இயக்கதினர் செயல்பட்டு வருகின்றனர்.

From around the web