அமெரிக்க நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி கார் விபத்தில் பலி! அதிபர் ஜோ பைடன் இரங்கல்

 
Jackie Walorski

அமெரிக்க நாடாளுமன்ற மூத்த பெண் உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி நேற்று நடந்த கார் விபத்தில் பலியாகி உள்ளார்.

இந்தியானா குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான ஜாக்கி வாலோர்ஸ்கியின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ஆழ்ந்த இரங்கலை மறைந்த ஜாக்கியின் கணவர் டீனுக்கு தெரிவித்தார்.

Jackie Walorski car crash

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் நேற்று (உள்ளூர் நேரப்படி) நடைபெற்ற ஒரு கார் விபத்தில், அதில் பயணித்த ஜாக்கி வாலோர்ஸ்கி மற்றும் அவரது அலுவலக ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

58 வயதான வாலோர்ஸ்கி, 2013-ல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரானார். அதற்கு முன்பு இந்தியானா பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக பணியாற்றினார். மேலும், அவர் ஒரு பத்திரிகையாளராக, மாநில சட்டமன்ற உறுப்பினராக, கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்ற) உறுப்பினராக திகழ்ந்தார்.

Jackie Walorski car crash

இந்நிலையில் அவரது மறைவு செய்தி தங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

From around the web