புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்பு என தகவல்

 
Ranil

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமிசிங்கே பொறுப்பேற்றார்.

President-house

இந்நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில், முதல் ஓட்டை சபாநாயகர் அபேவர்தனா பதிவு செய்தார். 2வது ஓட்டை ரணில் விக்கிரமசிங்கே போட்டார். தொடர்ந்து எம்.பி.,க்கள் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஓட்டளிக்க வந்தார். ஆனால், அவரது சகோதரர் பசில் ராஜபக்சே வரவில்லை.

Ranil

மொத்தமுள்ள 225 ஓட்டுகளில் 219 ஓட்டுகள் பதிவாகின. அதில் ரணில் விக்கிரமசிங்கே 134 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். இலங்கையில் 8 வது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வாகி உள்ளார்.இதனைத் தொடர்ந்து இன்று அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். இதனை அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

From around the web