சீன வானளாவிய கட்டிடத்தில் பெரும் தீ விபத்து!! வைரல் வீடியோ

 
China

சீனாவில் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு கட்டிடத்தில் தீ விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய சீன நகரமான சாங்ஷாவில் உள்ள வானளாவிய கட்டிடம் தீப்பிடித்து எரிகிறது. கட்டிடத்தின் முதல் மாடிக்கும் தீ பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் காணொளியில் செய்தி வெளியிட்டுள்ளன. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

china

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த தீ விபத்து குறித்த காணொளிகளை அப்பகுதி மக்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். கட்டிடத்தில் இருந்து அடர்ந்த புகை மூட்டமாக உள்ளது. இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது இன்னும் தெரியவில்லை.


சீன அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். சிசிடிவி வெளியிட்ட வீடியோவில், நகரின் மிக உயரமான கட்டிடத்தில் ஆரஞ்சு நிற தீ எரிவதைக் காட்டுகிறது. விபத்தையடுத்து வானத்தில் கரும் புகை கிளம்பியது. ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

From around the web