உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; உள்துறை அமைச்சர் உட்பட 16 உடல் கருகி பலி

 
Ukraine

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் இடையேயான போரானது 10 மாதங்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரையினுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நவீன ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. இதனால் உக்ரைன் படைகள் ரஷ்ய தாக்குதலை சமாளித்து முன்னேறி வருகின்றன.

Ukraine

இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. அதேவேளையில் இந்த போரில் ரஷியாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷியா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பிவருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, தனது அமைச்சக அதிகாரிகளுடன் இன்று ஹெலிகாப்டரில் சென்றார். தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே வந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மழலையர் பள்ளி அருகே நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில், உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உள்துறை இணை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், பள்ளி குழந்தைகள் 2 பேர் என மொத்தம் 16 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

From around the web